Know About Arul Bogaar Astrology
எனது ஜோதிடபயணம் 1992 ஆம் ஆண்டு இனிதேதொடங்கியது. நான் எனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் படிக்கும் பொழுதே எனது ஆசிரியர்களுக்கும் சகநண்பர்களுக்கும் சகுனநிமித்தங்கள் அடிப்படையில் முதலில் பலன் சொல்லி என்னுடைய ஜோதிடபயணத் தை தொடங்கினேன்.
அப்போது அந்தபலன்கள் துள்ளியமாக இருந்ததாக சகநண்பர்களும் ஆசிரியர்களும் கூறினார்கள் மற்றும் அந்தபலன்கள் நடைமுறையில் கூறியவர்களுக்கு நடந்ததைகண்டு ஜோதிடத்தின் மேல் எனக்குள்ள ஆர்வம் அதிகரித்தது.
இதற்கிடையே போகர் அருள்பெற்ற ஒரு குருநாதரின் மூலம் ஆன்மீக ரகசியங்களை கற்றுத்தெரிந்துகொண்டேன். இந்தக்கல்வி என்னுடைய ஜோதிடஅறிவை மேம்படுத்தியது.
இதில் சகலவிதமான பூஜைவிதிகளையும் யாகவிதிகளையும் கற்றுத்தெரிந்துகொண்டேன். இப்படி எனது பயணம் துவங்கியது.
இந்தப்பயணத்தில் 2004 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பல தலைநகரங்களுக்கு சென்று பிரபலமானவர்களுக்கு ஜோதிடரீதியாக பலர்சொல்லியும் பூஜாவிதிகளை பயன்படுத்தி அவர்களின் நன்மைக்காக உழைக்க காலம் எனக்கு கை கொடுத்தது.அதில் நான் முழுமையான வெற்றி அடைந்தேன்.

0 Comments